முகப்பு> களஞ்சியம்> புத்தகங்கள்> அந்நியபாஷை குழப்பம்

அந்நியபாஷை குழப்பம் (பாகம்-10)

அந்நிய பாஷை

அந்நியபாஷையை பற்றி நான் எழுத துவங்கியபோது ஆரம்பத்தில் இதன் சரித்திர பின்னணியைப்பற்றி நான் எழுதியதை ஞாபகப்படுத்துகிறேன். அப். 2ம் அதிகாரத்தில் முதல்முறை பரிசுத்த ஆவியானவரின் இறக்கத்தில் உண்டான சம்பவம். அதில் பல்வேறு நாடுகளில் இருந்து, பல்வேறு பாஷைகள் பேசும் யூதர்கள் எருசலேம் நகரத்துக்கு வந்து கூடினார்கள் என்றும் இங்கு இந்த யூதர்கள் எப்படி பல்வேறு நாடுகளில் சிதறடிக்கப்பட்டார்கள் என்பதையும் பாபேல் கோபுரம் பணியத் தொடங்கிய அக்கால மனிதர்களை கர்த்தர் பற்பல பாஷைகளை பேசவைத்து அவர்களை சிதறடித்த சரித்திரத்தையும் குறித்து எழுதியிருந்தேன்.

ஆபிரகாம் காலத்துக்குப் பிறகு யூதயினம் தோன்றியது. உலகம் முழுவதும் அவர்கள் சிதறடிக்கப்பட்டது. இப்போது பஸ்கா பண்டிகைக்கு பல்வேறு பாஷைகள் பேசும் யூதர்கள் எருசலேமிற்கு கூடிவந்த இந்த சூழ்நிலையில்தான் இவர்களுக்கு இயேசுதான் மேசியா என்பதை அறிவிக்க எருசலேமில் மேல்அறையில் காத்திருந்த சீஷர்கள்மேல் பரிசுத்த ஆவியானவர் முதல் முறையாக இறங்கி அவர்களை நிறைத்தார்.

பற்பல உலக நாடுகளில் சிறகடிக்கப்பட்ட யூதர்களை இந்த முழக்க சத்தம் மூலமாக கர்த்தரே அந்த மேல்வீட்டு அறைக்குமுன் கூட்டிச் சேர்;த்த விவரமும் அதாவது சீஷர்களின் வாயால் பற்பல பாஷைகளை பேச வைத்து அவர்களுக்கு அந்த யூதர்களுக்குள் விசுவாசத்தை வரவழைத்து அவர்கள் இயேசுவை மேசியவாக ஏற்றுக்கொள்ள வைத்த அந்த சம்பவ சரித்திரங்களை வரிசையாக விளக்கினேன். நான் விளக்கிய விவரங்களவான:
1.பற்பல பாஷைகளை பற்றிய விளக்கம்
2.எபேசு பட்டினத்தில் யோவானின் சீஷர்கள் அந்நிய பாஷைகளில் பேசி தீர்க்கதரிசனம் உறைத்த விவரமும் முக்கியமாக அதன் காரணத்தையும் விளக்கினேன்.
3.சமாரியர்களுக்கு பரிசுத்தாவியின் நிறைவு
4.கொர்நெல்லியூஸ் வீட்டார் பரிசுத்த அவியினால் நிறைக்கப்பட்டு பேசிய அந்நிய பாஷை (பரவசப் பேச்சு) ஆகியவற்றின் நோக்கத்தையும் அதன் விளக்கத்தையும் கூறினேன்.

1 கொரி. 14:2 அந்நிய பாஷை இரகசியம்

இந்த அதிகாரத்தை முழுவதையும் முறைப்படி தியானிக்காதுபோனால் குழப்பமும் முடிவாக தெளிவு பெறவும் முடியும். ஏற்கனவே நான் எழுதியபடி வேதத்தின் எந்த பகுதியை வாசித்தாலும் கவனிக்கவேண்டியது அந்தப்பகுதி எப்போது எழுதப்பட்டது? யாருக்கு எழுதப்பட்டது? எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது என்பதை விளங்கிக்கொள்ளாமல் வாசித்தால் வசனங்களையும் சம்பவங்களையும் நீங்கள் பிழையாக விளங்கிக்கொள்ள நேரிடும். ஜாக்கிறதை!

புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்ட நிரூபங்கள் யாவும் குறிப்பிட்ட அந்தந்த சபை மக்களிடத்தில் என்னென்ன குறைகளை, தவறுகளை, பாவங்களை, தவறான உபதேசங்களை அப்போஸ்தலர்கள் கண்டு அல்லது கேள்விப்பட்டார்களோ அதைவைத்துதான் ஆலோசனைக்காகவும். எச்சரிப்புக்காகவும் நிரூபங்களை எழுதுகிறார்கள்.

அந்நிய பாஷை பிரச்சனை கொரிந்து சபையில் மட்டும் தான் இருந்தது. காரணம் 14 பாஷைக்காரர்கள் அந்த சபையின் அங்கத்தினர்களாக இருந்தார்கள். ஆகவே இந்த சபைக்கு மட்டும் மொழிபெயர்ப்பு இலலாது போனால் சபைகளின் அந்நிய பாஷை பேசாதே என்று பவுல் ஆலோசனை கூறியிருக்கிறார். இப்போது தான் முக்கியமாக நீங்கள் கவனிக்கவேண்டிய பகுதி வருகிறது. இந்த அதிகாரம் முழுவதும் கொரிந்து சபைக்காக மட்டும் எழுதபப்ட்ட விஷயம் ஆகும் என்பதை முதலில் நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து கிறிஸ்தவ சபைகளுக்கும் இந்த அதிகாரத்தில் கூறப்பட்ட விஷயம் பொருந்தாது என்பதை கவனிக்க வேண்டும். புதிய ஏற்பாட்டு புத்தகத்திலேயே வேறு எந்த ஒரு நிருபத்திலும், எந்த ஒரு சபைக்கும் அந்நிய பாஷை என்ற ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை என்பதை கவனிக்கவேண்டும். அந்நியபாஷை சபைக்கு முக்கியமானால் அனைத்து சபைக்கும் நிருபம் எழுதும்போது சீஷர்கள் குறிப்பிட்டிருப்பார்களே?

கிறிஸ்து பிறந்து, மரித்து, உயிர்த்து பரமேரியப்பின் சுமார் 56 வருடங்களுக்கு பிறகு இந்த நிரூபம் எழுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் வேத புஸ்தகம் திருச்சபைக்கு எழுதிக் கொடுக்கப்படவில்லை. நியாயபிரமானம் அடங்கிய பழைய ஏற்பாட்டு புஸ்தகம் மட்டுமே யூதர்களிடம் இருந்தது. யூதர் அல்லாத விதவிதமான விக்கிரகங்களை வணங்கிவந்த வித்தியாசமான பலவித கலாச்சார பழக்கவழக்கங்கள் நிறைந்த பல பாஷைகளை பேசும் மக்கள் இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்டபின் கொரிந்து பட்டிண சபையில் இணைந்தார்கள் அதனால் அவர்கள் பழுகிவந்த கலாச்சார வழக்கங்கள் கொரிந்து சபையில் ஆராதனையின் யூத கலச்சார ஒருங்குகளை சீர்குலைக்க செய்தன. ஆகவே அவைகளை சரிப்படுத்த வேண்டி மாத்திரம் பவுல் இந்த நிரூபத்தை எழுதினார்.

கொரிந்து சபையில் மட்டும் 3 விதமாக அந்நியபாஷைகளை பேசி கொண்டிருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.
1.தேவனால் தீர்க்கதரிசன செய்திகளை கூற (பரிசாக) வரமாக கொடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்ட அந்நிய பாஷைகள் (அது வரமாக கர்த்தரால் பயன்படுத்தப்பட்டது). வேதபுத்தகம் எழுதப்படாத காலத்தில் அன்றைய கிறிஸ்தவ சபைகளுக்கு கொடுக்கப்பட்டது.
2.பரவசப் பேச்சுகள் (ectacy)
3.பாஷைகளைபோல உள்ள போலி பாஷைகள்

இந்த போலி பாஷைகளைத்தான் இப்போது அனைத்து பெந்தேகோஸ்தே சபைகளிலும் பாஸ்டரும் - சபை மக்களும் பேசிக்கொண்டிருப்பதை காண்கிறோம்.

இவைகளில் சரியானது? எது ஆவியானவரால் வரமாக கொடுக்கப்படுவது எது?என்பதை இனம் கண்டுபிடித்து வரங்களை கொரிந்து சபையினர் ஒழுங்காக பயன்படுத்தாததால் சரியான ஒழுங்குக்கு கொரிந்து சபையை கொண்டுவருதற்காக எழுதப்பட்டதுதான் கொரிந்து நிரூபம்.

1 கொரி 14ம் அதிகாரம் முழுவதிலும் வரங்களைப்பற்றி தெளிவாக அறிய முக்கிய விவரங்களை பவுல் எழுதுகிறார். இதில் பாஷை என்ற பதத்தை ஒருமையிலும் மற்றும் பாஷைகள் என்று பன்மையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கவேண்டும். மூல பாஷையில் ( Glossa பாஷையில் ஒருமை பாஷை, Glossai பாஷைகள் பன்மை)

வேதத்தில் 9 வரங்களை மட்டும் பிரதானமாக பவுல் குறிப்பிட்டுள்ளார். ஆனால் வரங்கள் 21க்குமேல் உண்டு என்று வேதத்தில் நாம் அறியலாம். இதில் கடைசி வரம்தான் அந்நிய பாஷை வரம் ஆகும். புதிய ஏற்பாட்டு வேத புஸ்தகம் எழுதப்படாததற்கு முன் உள்ள கிறிஸ்தவ சபையில் அந்நிய பாஷை வரம் இரண்டு விதமாக செயல்பட்டது

1.சபை மக்களோடு கர்த்தர் பேச அந்நிய பாஷை வரத்தை பயன்படுத்தினார்.

2.ஜெபத்தின்மூலம் தீர்க்கதரிசனம் அதாவது கர்த்தரின் வாரத்தைகளின் கர்த்தரின் விவரிக்க முடியாத (Mysteries)வைகளை அனுபவமாக உணர்ந்து அவரவர்கள் ஜெபத்தில் பேச அந்நியபாஷை வரத்தைப் பயன்படுத்தினார்.

KJV ஆங்கில வேதாகமத்தில் பாஷை என்று வருகிற பகுதிகளில் (Unknown tounges) என்று மொழிபெயர்த்துள்ளார்கள். குறிப்பிட்ட இந்த வார்த்தை எழுதப்பட்ட இடங்களிலெல்லாம் (italics) அதாவது சரிந்த எழுத்துக்களில் குறிப்பிட்டிருக்கிறது. அதன் அர்த்தம் அந்த குறிப்பிட்ட வார்த்தை மூல பாஷையில் இல்லை என்பதாகும் ஆரம்பத்தில் வேதத்தை மொழி பெயர்த்தவர்கள் அதை சேர்த்திருக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளலாம். இப்போது இந்த 14ம் அதிகாரத்தை அப்படியே கற்பனையில் கொண்டு வாருங்கள் 14 பாஷைகாரர்கள் நிறைந்த சபையில் ஆராதனை நடந்து கொண்டிருக்கிறது. துதித்தல் வேளை முடிந்து பிரசங்க நேரம் வருகிறது. பேதுருவோ, பவுலோ பிரசங்கிக்கிறார்கள், என்ன பாஷையில் பேசியிருப்பார்கள்? எல்லாரும் அறிந்த கிரேக்க மொழியில் பிரசங்கித்திருக்க வேண்டும். ஆகவே மொழி பெயர்ப்பு தேவையில்லாமல்போனாது.

அவரவர் தாய் மொழியில் ஜெபம் ஏறெடுக்கும்போது சபையில் அவர் அருகே இருக்கும் ஒரு நபர் ஜெபிப்பவரின் தாய் பாஷையை மற்றவர் கவனிக்கிறார். அருகே ஜெபித்த அந்த நபரின் பாஷை அவருக்கு அது அந்நிய பாஷை ஆகும். ஆகவே அந்த நபர் ஜெபிப்பது இவருக்கு விளங்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பவுல் 1 கொரி. 14:2ல் கூறுகிறார். அந்த ஜெபவேளையில் ஒருவன் ஆவியானவரால் உணர்த்தப்பட்டு ஜெபிக்கும்போது அவனுடைய தனிப்பட்ட இரகசியங்களை அல்லது தேவன் அவனோடு உணர்த்திய mysteries மற்றவர்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்று தான் அவன்தன் தாய்மொழியில் கர்த்தரிடம் மனம் விட்டு பேசுகிறான். சபையில் இருக்கும் மற்றவர்கள் அவன் ஜெபிக்கும் தாய் பாஷையின் அர்த்தம் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் பவுல்கூறுகிறார். அவன் பேசுவது பிரசங்கம் அல்ல. பிரசங்கத்துக்கு மொழிபெயர்ப்பு தேவை. அவரவர் செய்யும் ஜெபத்துக்கு மொழிபெயர்ப்பு தேவையில்லை. மற்றவர்களுக்கு அதன் அர்த்தம் புரிய வேண்டிய அவசியமும் இல்லை. காரணம் அவன் தேவனிடத்தில் பேசுகிறான் (ஜெபிக்கிறான்) என்கிறார். அவன் மற்றவர் அறியக்கூடாத தன்னுடைய தனிப்பட்ட இரகசியங்களைத்தான் அல்லது அவனுக்குமட்டும் வெளிப்படுத்த தேவன் செய்த ஆலளவநசநைள நினைத்து புகழ்ந்து தேவனிடம் பேசுகிறான். அதற்கு மொழிபெயர்ப்பு தேவையில்லை. இதைத்தான் இப்போது பெந்தேகோஸ்தே சபையினர் பேசும் அந்நியபாஷையோடு ஒப்பிடுகிறார்கள். இது அபத்தமாகும்.

சபையின் ஜெபவேளை சூழ்நிலையில் சொல்லப்பட்;ட வசனம் தான் 1கொ. 14:2 ஆகும். சபை ஆராதனையில் ஜெப வேளையில் ஜெபிக்கும் தனி ஜெப வாழ்க்கையும் அவனுக்கு பக்தி விருத்தியை உண்டாக்கி, தேவனோடு ஜெபத்தின் மூலம் நெருக்கத்தை உண்டாக்கும். பக்தி விருத்தி வசனத்தின் மூலமாக மட்டுமே விருத்தியாகும் அதோடு வசனத்தை புரிந்துகொண்டவன் ஜெபிக்க தொடங்குவான். இப்படி வசனம் - ஜெபம் ஆகிய இவற்றின்மூலமாக மட்டுமே பக்தி விருத்தியாகும்.

அடுத்து பவுல் கூறுவதை கவனியுங்கள். 5ம் வசனம் நீங்கள் எல்லாரும் அந்நிய பாஷை பேசும்படி விரும்புகிறேன் என்கிறார். மறுபடியும் வாசகர்களை ஞாபகப்படுத்துகிறேன். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் பவுல் கூறும் அந்நிய பாஷை ஆலோசனை. கொரிந்து சபைக்கு மட்டும்தான் பொருந்தும் சபையில் உள்ள எல்லோரும் அந்நிய பாஷை பேசும்படி பவுல் விரும்புவதாக கூறுவதின் காரணம் என்ன? மற்றவர்களின் பாஷையை பழகிக்கொண்டால் மற்றவர்களோடு (felloship) ஐக்கியம் உண்டாகும். அப்போதுதான் சபை ஒருமனதோடு அன்யோன்யத்தோடு செயல்பட முடியும் என்று அர்த்தம் கொள்ளலாம்.

பிரசங்கம் முடிந்தது. இப்போது ஜெப நேரம் சபை மக்கள் அனைவரும் பிரசங்கத்தில் உணர்த்தப்பட்ட விஷயங்களுக்காகவும் மற்ற விஷயங்களுக்காகவும் ஜெபிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஜெபம் என்பது தேவனோடு பேசுவது. சபை மக்கள் தேவனோடு பேசும்போது அவரவர் தாய்மொழியில் பேசுவதுதானே இயல்பு. அதுதானே அனைவருக்கும் சுலபமாக எளிதாக கர்த்தரிடம் பேசக்கூடியது. இப்படியிருக்க இன்றைய பெந்தேகோஸ்தே சபைகளில் அந்நிய பாஷையில் ஜெபிக்கிறேன் என்று கூறி சக்ரஸ்ரீ பக்ர-சங்கர- பல என்ற வார்த்தைகளையே திரும்ப திரும்ப கூறினால் அது பாஷை ஆகுமா? நன்றாக பரிசோதித்து உணருங்கள். நீங்கள் மேலே கூறப்படுவதுபோல் இரண்டுவித உளரல்கள் அல்லது வேறு வார்த்தைகள் உங்கள் யாவிலிருந்து வந்ததுண்டா? உங்கள் மனைவி, பிள்ளைகளை கேட்டுப்பாருங்கள். அல்லது மொபைலில் பதிவுசெய்து மறுபடியும் போட்டு கேட்டுப்பாருங்கள். உங்களை நீங்களே இத்தனை வருடமாக அந்நியபாஷை என்ற பெயரில் ஏமாற்றிக்கொண்டது விளங்கும். கொஞ்ஜம் யோசியுங்கள்.

அன்பான என் பெந்தேகோஸ்தே சபை வாசகர்களே, உங்கள் தாய் மொழியில் ஜெபிப்பதுபோல இன்பம் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது. கர்த்தருக்கு எல்லா பாஷையும் தெரியும் .என்பதை நீங்களாவது உணர்ந்து பாஷை பேசுவதை அடக்கிக்கொள்ளுங்கள்.

6வது வசனத்தை வாசித்து பாருங்கள். பவுலாகிய நான் உங்களுக்கு பிரசங்கம் செய்ய வசனத்தின் இரகசியங்களை வெளிப்படுத்த தீர்க்கதரிசன விளக்கங்களை கூற உபதேசம் செய்ய உங்களுக்கு தெரிந்த பாஷையில் நான் பேசாமல் உங்களுக்கு விளங்காத என் சொந்த பாஷையில் (அதாவது என் பாஷை உங்களுக்கு அந்நிய பாஷை ஆகும்) பேசினால் என்ன பிரயோஜனம்? என் பாஷையில் பிரசங்க செய்தியை நான் தயார்படுத்தி எடுத்துக்கொண்டு நான் உங்களிடம் வந்தால் உங்களுக்கு என்ன பிரயோஜனம்? என்கிறார்.

சரி, இனி கீழே உள்ள வசனத்தை படியுங்கள்

1 கொரி 14:8-11 அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால், எவன் யுத்தத்திறகு ஆயத்தம் பண்ணவான்? அதுபோல நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் பேசாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே உலகத்திலே எத்தனையோ விதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது. அவைகளில் ஒன்றும் அரத்தமில்லாததல்ல.

ஆயினும் பாஷைகளின் அர்த்தத்தை நான் அறியாமலிருந்தால் பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன். பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான். இத்தனை தெளிவாக விளக்கமாக பவுல் கூறினாலும் இன்றைய பெந்தேகோஸ்தே சபையினர் பிடிவாதமாக உளரிக்கொண்டு அதை ஜெபம் என்ற பொயில் கர்த்தரே எங்களைப்பேச வைக்கிறார் என்று கர்ததர்மேல் பழியை போடுகிறார்கள். இது ஆவியானவருக்கு விரோதமாக பேசுவதாகும். ஜாக்கிறதை.

இனியாரும் ஜெபத்திலே கடவுளோடுபேச கர்த்தர் ஜெபத்தில் அந்நிய பாஷையை கொடுத்தார் என்று கூறி சமாளிக்க முடியாது. அவர்கள் பாஷையில் ஜெபத்தில் உளரும்போதே அது போலியானது என்று நீங்கள் விளங்கிக்கொள்ளமுடியும். மற்றவர்கள் முன்னிலையில் பரிசுத்தஆவியின் வல்லமையைப்பெற்றேன் என்று காண்பிக்க வேண்டி அவர்கள் பேசும் பாஷை நூற்றுக்குநூறு பொய் பாஷை என்பதை உங்களால் இனி நன்றாக அறிந்து கொள்ளமுடியும்.

1கொ. 14: 14 நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம் பண்ணினால் அதாவது சபையில் எல்லாரும் ஜெபிக்கும்போது என் சொந்த பாஷையில் ஜெபம் பண்ணாமல் நான் ஏற்கனவே கற்றுக்கொண்ட, கொரிந்து சபையில் உள்ள யாராவது ஒருவரின் பாஷையில் நான் ஜெபம் செய்தால் சபையில்உள்ள அந்த பாஷையை அறிந்தவன் நிச்சயமாக புரிந்துக் கொள்ளுவான். ஆண்டவரும் அந்த பாஷையை புரிந்துக்கொள்வார்.

ஆனால் என் எண்ணம், என் கருத்து யாவும் என் ஜெபத்தை கேட்கும் அவர்களுக்கு பிரயோஜனப்படாது எனக்கு நான் என்ன ஜெபித்தேன் என்று விளங்காமல்போகும். ஆனால் நான் அவர்கள் பாஷையில் செய்த ஜெபம் சபையில் உள்ள அந்த பாஷை தெரிந்தவர்களை ஜெபத்தில் நடத்த உதவியாகஇருக்கும். எனக்கு என் ஜெபம் பிரயோஜனபடவேண்டுமானால் என் சொந்த பாஷையில் ஜெபத்தில் பேசுவதே எனக்கு நலமானதாக இருக்கும். மற்றபடி சபையில் செய்த என் ஜெபம் பயனற்றதாகவே போகும். இந்த சம்பவங்கள் யாவும் வேத புத்தகம் எழுதப்படாத முன்புஉள்ள காலத்துகுறியது என்பதை கவனிக்கவேண்டும். அந்த காலகட்டத்தில் பாஷை பிரச்சனைகளில் அகப்பட்ட கொரிந்து சபையில் உண்டான இதுபோன்ற சம்பவங்கள் இன்றைய காலத்துக்கு பொருந்தாது. அதை பின்பற்றவும் கூடாது.

நம் சொந்த பாஷையில் வேதபுத்தகம் இன்று நமக்கு கிடைத்துவிட்டது. நம் சொந்த பாஷையில் மனம்விட்டு தெய்வத்தோடு பேச இன்று தேவன் நமக்கு கிருபை அளித்துள்ளார். இந்தக் காலத்தில் பலர் கர்த்தர் சபையில் உள்ள அனைவரையும் அந்நியபாஷையில் பேசும்படி கர்த்தரே அருளுகிறார் என்பவர்களிடம் ஜாக்கிதையாக இருங்கள். உதாரணமாக சபையில் ஹிந்தி பாஷை அல்லது ஆப்பிரிக்க பாஷையில் பிரசங்கங்கள் செய்பவர்களுக்கு எதற்காக சபை பாஸ்டர் மொழி பெயர்ப்புக்கு ஒரு ஆளை நியமிக்கிறார். இவர்களின் கூற்றுபடி அந்நியபாஷையை மொழிபெயர்க்கும் வரம்பெற்றவர்கள் சபையில் இருந்தால் அவர்கள் தங்கள் ஆவியின் நிறைவில் இவர்களின் பாஷையை மொழி பெயர்க்கலாமே? அப்படி செய்யாமல் மொழிபெயர்ப்பாளரை வெளியிலிருந்து ஏன் கூட்டிவருகிறார்கள்? பாஸ்டர்க்குமே நிறைய அந்நியபாஷை பேச தெரியுமே? அவரேகூட மொழி பெயர்த்திருக்கலாமே? பொதுவாக வாசகர்கள் அறியவேண்டியது, பெந்தகோஸ்தே சபையினரின் அந்நியபாஷையைக்குறித்து கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் அது பொய்யானது, மாயமாலமானது, அது அர்த்தம் இல்லாதது, அது கர்த்தரால் பேசவைப்பது அல்ல என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ளுங்கள்.

நம் கர்த்தர் ஞானமுள்ளவர், அதிசயங்களை செய்பவர். சபையில் அல்லது நம் வாழ்வின் சூழ்நிலைக்கு ஏற்றபடி பாஷை வரங்களை பயன்படுத்துவார். வேதத்தின்படி இதுதான் உண்மை.

கழுதையை மனிதன் பாஷையில் பேசவைத்த தெய்வம். எண்.22:28

கர்த்தருடைய ஊழியக்காரன் கர்த்தரின் திட்டத்துக்கு எதிராக செயல்பட கழுதையின் மேல் ஏறி பயணம் செய்தான். கர்த்தர் அவனை தடுக்க தூதனை அனுப்பினார். வழியில் குறுக்கே நின்ற தூதனைகழுதை கண்டது. ஆனால் ஊழியக்காரன் கண்ணுக்கு தூதன் தெரியவில்லை. கர்த்தரின் வார்த்தைக்கு விரோதமாக ஒரு ஊழியன் செயல்படும்போது அவன் கண்களுக்கு முன் தேவகோபம் மறைக்கப்படுகிறது. ஆனால் கழுதையின் கண்கள் அதைக்கண்டது. கழுதை அப்படியே கீழே படுத்துக் கொண்டது. அதற்குமுன் பலமுறை அந்த கழுதை தன் எஜமானனை எச்சரிக்கை செய்யும் விதத்தில் ஊழியக்காரனின் பயணத்தை பல விதத்தில் தடுத்தது. ஆனாலும் அவன் பணத்துக்காகவும் பணத்தின்மேல் உள்ள ஆசையால் பொய் திர்கதரிசனம் கூற தீவிரித்து மீண்டும் பயணம் செய்யவேண்டி கழுதையை பிரம்பால் அடித்து விரட்டினான், கழுதையை எழுந்திருக்கும்படி அதை அடித்தான்.

இப்போது ஒரு அற்புதம் நடக்கிறது. கழுதையின் வாயை கர்த்தர் திறந்தார் என்று வேதம் கூறுகிறது. உடனே கழுதை பேசியது. தேவதிட்டத்தையும் தவறான தீர்கதரிசனம் சொல்லசென்ற ஊழியனையும் கழுதை தன்வாயால் ஊழியனோடு பேசி தடுத்தது. இப்போதுதான் ஊழியனின் கண்களை கர்த்தர் திறந்தார். கர்த்தர் ஊழியனின் கண்களை திறந்தார் என்று 31ம் வசனம் கூறுகிறது. உடனே ஊழியனும் தன் தவறை உணர்ந்து தன் தவறான ஊழியத்தை சரி செய்துக்கொண்டான்.

அன்பான அனைத்து பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களே, விசுவாசிகளே‚
ஊழியனின் தவறான போதனையை கர்த்தர் உணர்த்த ஒரு கழுதையை உபயோகிக்க வேண்டிய அவசியம் வந்தது. அந்த கழுதையை கவனியுங்கள். கழுதை தன் மிருகபாஷையில் ஊழியனோடு பேசாமல், ஊழியக்காரனுக்கு என்ன பாஷை தெரியுமோ, அவனுடைய பாஷையில் தேவ திட்டத்தைப் பேசி விளங்க வைத்தது. ஒரு கழுதை ஊழியக்காரனுடன் பேசும் ஒழுங்கை கவனித்து பாருங்கள். கழுதைக்கு வேத ஒழுங்கு விளங்குகிறது. மிருகபாஷையில் மனிதனிடம் பேசுவது வேஸ்ட் என்று கழுதை விளங்கிக்கொண்டது. ஆகவே ஊழியக்காரன் பாஷையிலேயே பேசுவோம் என்று தன்வாயை திறந்து அந்த கழுதை ஊழியக்காரனோடு பேசும்போது 6 அறிவுபெற்ற ஊழியனுக்கு வேதம் அறிந்த அல்லது பாஸ்டர்களுக்கு, விசுவாசிக்கு ஒரு கழுதைக்கு உண்டான புரிதல் உணர்வுகூட மனிதனுக்கு இல்லாமல் போனதேன்? கடவுளுக்கு சகல பாஷையும் தெரியுமே என்ற அறிவு பாஸ்டர்மார்களுக்கு இல்லாமல் போனதேன்?

நிறைய பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள் கூறுவதை நான் கேட்டிருந்தேன். ஒரு குழந்தை தத்தக்க புத்தக்கா என தன் தாயிடம் பேசும்போது அருகில் இருக்கும் நமக்கு அந்த குழந்தையின் பாஷை விளங்காது. ஆனால் பெற்ற தாய்க்கு தான் அந்த குழந்தை எதைக்குறித்து பேசுகிறது? என்ன கேட்கிறது? என்பது விளங்கும் ஆனால் நமக்கு விளங்காது. இப்படிப்பட்ட சிறுபிள்ளைகளின் உதாரணங்களை இந்த பாஸ்டர்கள் பேசி அதை கேட்டு கேட்டு புளித்துப்போய்விட்டது. இந்த உதாரணத்திலே நியாயம் இருப்பதுபோல் தெரியும். ஆனால் இது சம்பந்தம் இல்லாத உதாரணம் ஆகும். மேலும் சமாளிக்கும் உதாரணம் ஆகும்.

விசுவாசிகளான நாம் என்ன குழந்தைகளா? விசுவாசத்தில் குழந்தைகள் போன்ற நாம் ஆவிக்குரிய ஜீவியத்திலே வளரவேண்டும் என்று 1 பேது 2: 3ல் பேதுரு கூறுகிறாரே. இன்னும் எத்தனை நாட்களுக்கு குழந்தைகளைப்போல் வாயில் விரல்வைத்து சப்பிக் கொண்டிருப்பீர்கள் . வசனத்தில் வளரவேண்டாமா? தெளிவான வார்தையில் நீங்கள் பேசாவிட்டால், நீங்கள் பேசுவது என்ன என்று எப்படி விளங்கும் என்று பவுல் எழுதினாரே. 1கொரி 14:8-10. மூளை வளர்ச்சியற்ற பிள்ளையைப்போல பைத்தியம் பேசுவதுபோல நீங்கள் கருதப்படுவீர்கள்.

ஆகவே பரிசுத்தஆவியினால் நிரப்பப்படும் இந்த அனுபவம் குறிப்பிட்ட ஒரு சபைப் பிரிவினர்க்கே (அதாவது பெந்தேகோஸ்தே சபை பிரிவினருக்கே) என எண்ணப்பட்டு வந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. விசுவாசிகளான நாம் யாவரும் பரிசுத்த ஆவியனால் நிரப்பப்படவேண்டியது அவசியம். அந்நியபாஷையை சபை மக்கள் பேச கர்த்தர் சொல்லவில்லை. அந்த காலத்து சபைக்கு அந்நியபாஷை வரமாக மட்டுமே கொடுக்கப்பட்டது. வரம் கர்த்தர் தான் கொடுப்பார் சபை மக்கள் யாவரும் பேச அல்ல, அந்நியபாஷையை பேச முயலவேண்டாம் என்று எழுதும் என்னை டாக்டர் பரிசுத்தஆவியை இல்லை என்று மறுக்கிறார் என்கிறார்கள். பரிசுத்த ஆவியானவருக்கு டாக்டர்.புஷ்பராஜ் எதிரி என்று வாய் கூசாமால் பேசுகிறார்கள். இவ்வளவு எழுதியும் இன்னும் பெரும்பாலோர் என்னை விளங்கிக்கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனை தருகிறது.

இப்படி சொன்னதையே திரும்பதிரும்ப கூறி உளரும் வார்த்தைக்கு அந்நியபாஷை என்று அதற்கு பெயர் வைத்து இப்படி தவறாக பேசிபேசியே சபை மக்களை திருச்சி பாஸ்டர்.நார்மன் ஏமாற்றினாரே? சென்னையில் உள்ள பல பாஸ்டர்மார் அவரைப்போலவே மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதை போலீஸ் கண்டுபிடித்த பிறகுதான் சபை மக்களுக்கு உண்மை தெரிகிறது. தினசரி பத்திரிக்கையில் பக்கம் பக்கமாக பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களின் லீலைகள், பண ஊழல்கள்பற்றி எழுதியும், மக்கள் தெளிவு பெறவில்லையானால் இவர்களை இன்னும் எப்படிதான் விளங்க வைப்பது?

அந்நியபாஷைப்பற்றி இப்படி உளரல் என்றெல்லாம் மற்றவர்கள் பேசுகிறார்களே நாம் பேசும் பாஷையை நாமே ஆராய்ந்து பார்ப்போம் என்று ஒரு நாளாவது அவரவர்கள் பேசும் பாஷையை ஆராய்ந்து பார்ப்பீhர்களேயானால் நீங்களே வெட்கப்பட்டுபோவீர்கள். நான் இப்படியெல்லாம் அர்த்தம் இல்லாமல் உளறினேனே என்று ஆச்சரியப்படுவீர்கள்?வெட்கப்படுவீர்கள்?

வரங்கள் (Gift)

வரங்கள் 22 ஆகும்.(9 வரங்கள்அல்ல), அந்நியபாஷை வரம் என்பது புதிய ஏற்பாட்டு சபைக்கு மட்டும் கர்த்தர் சபை மக்களோடு பேசுவதற்காக கொடுக்கப்பட்டதாகும். மற்றபடி மனிதன் கடவுளோடு பேசுவதற்காககல்ல. மனுஷன் ஒரு நாளும் அந்நிய பாஷை மூலமாக கர்த்தரிடம் பேசமுடியாது. அவரவர் தாய் பாஷையில் ஜெபித்தால்போதும். நம்முடைய தெய்வத்துக்கு உலகத்தில் உள்ளவர்பேசும் சகலபாஷைகளும் தெரியும். ஜெபத்தில் நம்மை உளரவைத்து பைத்தியக் காரர்களாக்குகிறார்கள். நமக்கு தொல்லைக்கொடுக்கும் தெய்வம் அல்ல (மீகா 3.8).

பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனம் நிறைவேறுதல்தான் புதிய ஏற்பாடு என்பது நியாய பிரமாண புத்தகம் தீர்க்கதரிசன புஸ்தங்களும், சங்கீதங்களும் சுட்டிக்காட்டும் கிருபையே வரம் ஆகும். லூக். 24 : 25,27,44. யோ 1: 45, 5: 39,11: 8,57 புதிய ஏற்பாட்டு சபையின் ஆரம்பகாலத்தில் அப்போஸ்தலர்களும், சுவிசேஷகர்களும் பரிசுத்த ஆவியினால் வேதவசனங்களை விவரித்து விசுவாசிகளை வசனத்தில் உறுதிபடுத்தனார்கள்.

இயேசுவை வெளிபடுத்த சபைக்கு அருளப்பட்ட ஆவிதான் தீரக்கதரிசன ஆவியாகும். 1கொ 16 : 31, வெளி 19 : 10 ஆத்மீக வரங்களையும் குறிப்பாக தீர்க்கதரிசன வரங்களையும் வாஞ்சிப்பீர்கள் என்று பவுல் கூறியதின் (1கொரி : 14:1) அடிப்படை காரணம் இதுவேயாகும். தீர்க்கதரிசன வரங்களை கேளுங்கள் என்று கூறவில்லை என்பதையும் நீங்கள் அறியவேண்டும். சபை என்ற சரீரத்தின் அவயங்களை செயல்படுத்த கிருஸ்து ஆவிக்குறிய வரங்களை தருகிறார்.

அந்த ஆவிக்குரிய வரங்களில் ஒன்றுதான் தீர்க்கதரிசனம். தீரக்கதரிசிகள் தெய்வ வார்த்தைகளை சபைக்கு கூறினார்கள். அப்போஸ்தவர்கள் மட்டும் ஆவி விசுவாசிகளுக்கு (அப் 15:32) புதிய ஏற்பாட்டு சபையின் தீர்க்தரிசன கர்த்தரின் வசனத்தை உபயோகித்து விசுவாசிகளுக்கு பக்திவிருத்தியை உண்டாக்குகிறார். தீர்கதரிசனத்தை வசனத்தின் வழியாகத்தான் கர்த்தர் தன் சொந்த விருப்பப்படி அதை வெளிபடுத்துகிறார். அப் 13:1. அதனால் தீர்க்கதரிசனத்தை அற்பமாக என்ன கூடாது என்று வேதம் எச்சரிக்கிறது 1தெச 5: 20. 1கொரி . 12 : 30
1கொரி . 14 : 23, 27,28

ஆவிக்குரிய வரம் என்பது வேதத்தில் 3 இடங்களில் காணப்படுகிறது.

ரோ. 1 : 11, 1கொரி. 12 : 1,14. இதில் ரோ 1:11 மாத்திரமே ஆத்மீக வரம் என்ற மூலவார்த்தையில் எழுதப்பட்டுள்ளது.

கர்த்தரிடமிருந்து கிருபையால் கிடைக்கும் (gift) பரிசுதான் அல்லது வரம்தான் கிருபாவரம் என்பது ஆகும். பரிசுத்தஆவியானவர் குறிப்பிட்ட விசுவாசியை கருவியாக உபயோகிப்பதுதான் ஆவிக்குரிய வரங்கள் என்பதாகும். இது ஒரு விசுவாசி தனிப்பட்ட முறையில் தனித்து செய்யும் செயல் அல்ல. கிருபாவரம் ஆத்மாவின் வெளிச்சம் ஆகும். 1கொ. 12: 7

ஆத்மீக வரத்தின் விசேஷங்கள்

1.ஆத்மீக வரத்தை கொடுப்பது தெய்வம்.
2.எல்லா விசுவாசிகளுக்கும் கிருபா வரம் கிடைக்கிறது.
3.கிருபா வரம் கிடைக்காத விசுவாசிகள் யாரும் இல்லை. 1கொ. 12 : 7
4.கிருபாவரம் உபயோகிப்பது அன்பின் அடிப்படையில் இருந்தாலே அது பிரயோசனப்படும். 1கொரி. 13. அன்பு இல்லை என்றால் அந்த வரம் இருந்தும் பிரயோனமில்லை.
அ. ஆத்மீக வரங்களின் எண்ணிக்கை
(ரோ. 12:6–8, 1கொரி. 12 7 – 11, 1கொரி 12:28-30, எபே 4:11–13, 1பேது 4:10,11, ரோ. 12:6-8)
1.தீர்க்கதரிசனம் - ரோ. 12:6 – 8, 1கொ. 12:10, எபே 4:1
2.ஊழியம் - ரோ 12:7, 1பேது 4:11
3.உபதேசம் - ரோ 12:7, 1கொரி 12:2, எபே 4:11
4.போதிப்பது - ரோ 12:7
5.உதவி செய்தல் - ரோ 12:8
6.கண்காணிப்பு - ரோ 12:8
7.இரக்கம் பாராட்டல் - ரோ 12:8
8.திருமண வாழ்க்கை - 1கொ 7 : 8
9.திருமணம் இல்லாத வாழ்க்கை - 1கொ. 7:8
ஆ. 1கொரி. 12:7-11
10. ஞானத்தின் வசனம் 1கொ 12:8
11. அறிவை உணர்த்தும் வசனம் 1கொ 12:8
12. விசுவாசம் 1கொ 12:9
13.சுகமளிக்கும் 1கொ 12:9,28
14. சக்தி 1கொ 12:16
15.ஆவியை பகுத்தறிதல் - 1கொ 12 : 10
16.பல பாஷைகள் 1கொ 12 : 10
17. பாஷைகளை குறித்து வியாக்கியானம் - 1கொ 12 :10, 1கொ. 12 : 28 - 30
18.அப்போஸ்தலர் 1கொ 12 : 28, எபே 4: 11
19. தீர்கதரிசனம் 1கொ 12 : 28, எபே 11
20.உதவிகள் செய்வது (ஆங்கிலத்தில்) - 1கொ 12 : 28
21.ஆளுகைகள் - 1கொ 12 : 28, எபே 4 : 10, 11
22.சுவிசேஷகர்கள் -எபே 4 : 11
23. மேய்பவர்கள் எபே 4 : 11

ஆனால் பேதுருவோ வரங்களை இரண்டு பாகங்களாக உபயோகிக்கிறார். 1. பிரசங்கம் 2. ஊழியம் 1பேது 4 : 11