முகப்பு> களஞ்சியம்> புத்தகங்கள்

புத்தகங்கள்

தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்

தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்

வேதத்தை வாசிப்பதிலிருந்து நாம் எந்த அளவிற்கு ஆதாயம்பெறுகிறோம்? 2தீமோத்தேயு 3: 16, 17ம் வசனங்களில், 'வேதவாக்கியங்களெல்லாம்' நமக்குப் 'பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது' என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நம்முடைய வேதவாசிப்பிலிருந்து எந்த அளவிற்கு நாம் ஆதாயம்பெறுகிறோம்? இன்னும் அதிகமாக நாம் ஆதாயம் பெறுவதெப்படி?

கிறிஸ்தவ அனுபவத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இந்தக் கேள்விகள் அடிப்படையானவை, பிங்க் அவர்கள் எழுதிய இந்தப் புத்தகத்திற்கும் தலைப்பை இக்கேள்விகள் தருகின்றன. அவர் எழுதியப் பல புத்தகங்களில் இந்தப் புத்தகம் மிகச் சிறந்தது, நிச்சயமாகக் கிறிஸ்தவ வாலிபர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிரயோஜனப்படக்கூடியது.
தமிழாக்கம்: திரு.கோ.கண்ணன்

இப்புத்தகம் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் அச்சுவடிவிலும் தயாராக உள்ளது. விலை ரூ. 60/- (அஞ்சல் வழியாக பெற ரூ.25 கூடுதல்). புத்தகம் தேவைப்படின் எங்களைத் தொடர்புக்கொள்ளவும்.

புத்தகத்தைப் படிக்க...

அத்தேனே பட்டணத்தில் பவுல்

அத்தேனே பட்டணத்தில் பவுல்

அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான். (அப் 17: 16,17)

அத்தேனே பட்டணத்தில் பவுல் கண்ட காட்சிகள் எவ்விதத்தில் அவரை பாதித்தது, அதிலிருந்து கிறிஸ்தவர்களாகிய நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சத்தியங்கள் என்ன? என்பதை விளக்கும் சிறந்த புத்தகம்.

இது ஜெ.சி. ரைல் (J.C. Ryle) அவர்கள் எழுதிய "Paul in Athens" என்ற ஆங்கில செய்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.
தமிழாக்கம்: திரு.கோ.கண்ணன்

புத்தகத்தைப் படிக்க...

தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளுவது எப்படி?

தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளுவது எப்படி?

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர் 12:2)

தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் தவறான வழிமுறைகள் என்ன? சரியான வழிமுறைகள் என்ன? தேவனுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தம் என்றால் என்ன என்பதை விளக்கி, ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய சித்தத்தை எப்படி அறிந்துக்கொள்ளுவது என்பதை விளக்கும் சிறந்த புத்தகம்.
தமிழாக்கம்: திரு.கோ.கண்ணன்

புத்தகத்தைப் படிக்க...

அந்நியபாஷை குழப்பம்

அந்நியபாஷை குழப்பம்

பெந்தேகோஸ்தே கிறிஸ்தவர்களும், தமிழக போலி கிறிஸ்தவத் தொலைக்காட்சி கிறிஸ்தவர்களும் போலியான அந்நியபாஷைக்கு அடிமையாகி இருக்கிறார்கள். ஏன் இந்த பெந்தேகோஸ்தே சபைகளில் பேசப்படும் அந்நியபாஷை போலியானது என்பதை வசன ஆதாரங்களுடன் விளக்கும் ஜாமக்காரன் புஷ்பராஜ் அவர்களின் புத்தகம்.

புத்தகத்தை படித்து தெளிவுபெற்று போலியான அந்நியபாஷையை விட்டு, உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ கிறிஸ்தவர்களை அழைக்கிறோம்.
ஆசிரியர்: Dr.புஷ்பராஜ் (ஜாமக்காரன்)

புத்தகத்தைப் படிக்க...