முகப்பு> களஞ்சியம்> பொன்மொழிகள்> ஆர்தர் பிங்க்
மனிதனில் வாழும் பாவத்தை
வேர் அறுக்க முதல்முறை இயேசு வந்தார்…
பாவத்தில் வாழும் மனிதரை
வேர் அறுக்க இரண்டாம்முறை இயேசு வரப்போகிறார்…
-ஆர்தர் வால்கிங்டன் பிங்க்
உங்கள் இருதயம் தேவனுடையவைகளில்
சரியாக இல்லாவிட்டால்,
உங்கள் வெளிப்பிரகாரமான செய்கைகள்
அனைத்தும் வீண்!
-ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்
தான் பாவி என்பதை ஒத்துக்கொள்ளுவதல்ல,
பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புதலே
ஒரு தேவனுடைய பிள்ளையை உலகத்தாரிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.
-ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்
சோம்பேறிக்கு,
வேதாகமத்தின் எந்த ஒரு வசனமும்
தன்னுடைய அர்த்தத்தை வெளிப்படுத்துகிறதில்லை!
-ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்
தேவனின்,
ஆவிக்குறிய இரட்சிப்பின் அறிவே
ஒவ்வொரு மனிதனின்
மாபெரும் தேவை…
-ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்
உலகப்பொருட்களில் ஏழையாக இருந்தாலும்,
தனக்கு அன்பானவர்களை இழந்து தவித்தாலும்,
சரீர வேதனையை அனுபவித்தாலும்,
பாவத்தாலும், சாத்தானாலும் துன்பப்படுத்தப்பட்டாலும்,
உலகத்தால் பாடுபடுத்தப்பட்டாலும்,
தேவனுக்குள் மகிழ்ச்சியாயிருத்தல் என்பது,
ஒரு கிறிஸ்தவனின் கடமை மற்றும் பாக்கியம்!
-ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்
பெரிய நதிக்கு பதிலாக,
இன்றைக்கு இருந்து நாளை வற்றிப்போகும் நீரோடையையே
அடிக்கடி தேவன் நம்முடைய வாழ்க்கையில் தருகிறார்.
ஏன்?
நாம் ஆசீர்வாதத்தின் மேல் சாய்ந்துக்கொள்ளுவதற்குப் பதிலாக,
ஆசீர்வதிப்பவரின் மேல் சாய்ந்துக்கொள்ளுவதற்காக!
-ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்
ஜெபம் என்பது
நம்முடைய தேவைகளை
தேவனிடம் தெரிவிப்பதற்காக
ஏற்படுத்தப்பட்டதல்ல!
மாறாக, நம்முடைய தேவைகளை
நாம் அறிந்திருக்கிறொம் என்பதை
அவரிடம் அறிக்கை செய்வதாகும்.
-ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்