முகப்பு> களஞ்சியம்> கேள்வி பதில்கள்
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள். இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தைக்கு அத்தனை பெரிய வல்லமை இருக்கிறதாக நிறைய கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.
பள்ளிக்கு போகும் பிள்ளைகளுக்கு இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லி நெற்றியில் சிலுவை போட்டு அனுப்புவது பரீட்சை எழுதும் போது இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லி விட்டு எழுது என்று ஆலோசனை கொடுப்பதும் சொப்பனம் கண்டு நடுஇரத்திரி அடிக்கடி எழும் சிறு பிள்ளைகளுக்குகூட இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லிவிட்டு படு. பயம் நீங்கும் என்று சொல்லிக்கொடுப்பது. தடுக்கி கீழே விழுந்து எழுந்தால் இயேசுவின் இரத்தம் ஜெயம் சொல்வது? அவ்வளவு ஏன்? ஜலதோஷம் வந்து ஒரு தும்மல் தும்மும் போதே இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்வது? இதெல்லாம் என்ன?
பெந்தேகோஸ்தே சபை விசுவாசிகள்தான் தான் உளருவது என்ன என்று விளங்கிக் கொள்ளாமல் அந்நியபாஷை பேசுகிறார்கள். ஆனால் அந்நியபாஷை பேசாத ஆழமான நல்ல விசுவாசிகளும், பெற்றோர்களும், மிஷனரி ஊழிய வாஞ்சை உள்ளவர்களும்கூட இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று கூறுவது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. வசனத்தை ஆழமாக தியானிப்பவர்கள்கூடவா அர்த்தம் புரியாமல் கண்டதிற்கெல்லாம் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்வது?
இயேசுவின் இரத்தத்தின் மேன்மையைக்குறித்து அறிந்துக்கொள்ளுங்கள். இயேசு சிந்திய இரத்தத்தின் நோக்கத்தை உணர்ந்துக்கொள்ளுங்கள். இயேசுவின் இரத்தம் என்ற வார்த்தை மந்திர வார்த்தையல்ல, இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்வதால் வியாதி சுகம் ஆகாது. இயேசுவின் இரத்தம் ஜெயம் சொல்லிவிட்டு பரீட்சை எழுதுவதால் பரீட்சை கேள்விகளுக்கு பதில்தானே மனதில்வரும். அப்படியே எழுதி பாய் செய்துவிடலாம் என்ற எண்ணத்தை பிள்ளைகளுக்கு தவறாக போதிக்காதீர்கள். வயிறு வலி வந்தால் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லி வலி உள்ள வயிற்றில் சிலுவை போட கற்றுக்கொடுக்காதீர்கள்.
குறுக்கு வழி ஆசீர்வாத்திலேயே பழக்கப்பட்ட நாம் கிறிஸ்தவ பரம்பரைக்கு இயேசுவின் இரத்தம் ஜெயமும் குருட்டு மந்திர வார்த்தையாகிப்போனது.
பரீட்சைக்குபோகும்முன் வீட்டில் அந்தந்த பாடங்களை ஜெபத்தோடு படித்து ஆயத்தம் செய்ய பழக்குவியுங்கள். பரீட்சை எழுதும் அறையில் கேள்விதாள் கொடுத்தவுடன் படித்தது ஞாபகத்தில் வர ஞாபக சக்திக்காக ஒரு சிறு ஜெபம் செய்ய கற்றுக்கொடுங்கள். அந்த ஜெபம் நிச்சயம் பயன் கொடுக்கும் பலனும் கொடுக்கும். இயேசுவின் இரத்தம் ஜெயம்கூறினால் எந்த பலனும் கொடுக்காது. எந்த ஆசீர்வாதமும் கிடைக்காது. எந்த சுகமும் கிடைக்காது. அந்த வார்த்தைக்கு சக்தி கிடையாது.
இயேசுவின் இரத்தத்தை புரிந்து விசுவாசித்து பாவ அறிக்கை செய்து இயேசுவின் இரத்தத்தால் விசுவாசித்தில் கழுவப்படும்போதுதான் அனைத்து ஆசீர்வாதங்களும் கிடைக்கும். இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களின் ஜெபம் கேட்கப்படும்.
இயேசுகிறிஸ்து சிந்திய இரத்தத்தின் காரணத்தை புரிந்துக்கொண்டு, பாவ அறிக்கை செய்தால் இயேசுவின் இரத்ததால் கழுவப்படுவீர்கள்.1யோ 1:7 வசனம் இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் கழுவி சுத்திகரிக்கும். இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தையை உபயோகித்து ஏராளமான பாட்டுகள் வெளிவந்து மறைந்தன.
சுகமளிக்கும் அற்புத கூட்டங்களில் இந்த வார்த்தையை உபயோகிக்காத ஊழியர்களே கிடையாது எனலாம். இவர்கள் இப்படி தவறாக உபயோகிப்பது மட்டுமல்லாமல்கூட்டத்தில் ஜெபிக்கும் மக்களை இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று கத்தவும், கதறவும், அழுவவும் வைக்கிறார்கள். இது மிகப் பரிதாபம். அந்த மக்களும் அதன் அர்த்தம் விளங்காமல் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்றுகூறுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றதை உணராமல் அழுது உருள்கிறார்கள்.